SuperTopAds

மீண்டும் ஆரம்பித்த ஈரானுக்கான ஓமான் விமான சேவை!

ஆசிரியர் - Editor IV
மீண்டும் ஆரம்பித்த ஈரானுக்கான ஓமான் விமான சேவை!

ஓமானின் SalamAir விமானம், பல மாத இடைவெளிக்குப் பின்னர் மஸ்கட்டிலிருந்து ஈரானின் தெஹ்ரான் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தை (IKA) வந்தடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமானச் சேவை வாரத்திற்கு இரண்டு முறை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரானுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சர்வதேச நிதி அமைப்புக்கான அணுகலைத் துண்டிப்பது தொடர்பாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஈரானின் நிதி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், ஈரானுடனான பிராந்திய விமானத் தொடர்புகள் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கின்றன.

Radio