SuperTopAds

பாப்பரசரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்!

ஆசிரியர் - Editor IV
பாப்பரசரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்!

நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 14 ஆம் லியோ பாப்பரசர், நான்கு நாட்களுக்குப் பிறகு ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

71 வயதான பாப்பரசர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியபோது, எவருடைய உதவியுமின்றி தனது சிற்றூர்தியை நோக்கி நடந்து சென்றதுடன், தன்னைக் காண்பதற்காக வருகை தந்திருந்த மக்களுடனும் உரையாடியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுமார் 90 நிமிட அறுவை சிகிச்சையின் போது, பாப்பரசரின் வலது நுரையீரலின் கீழ் பகுதி அகற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனைகள் மற்றும் நெஞ்சுப்பகுதி எக்ஸ்-ரே (X-ray) பரிசோதனைகளின் மூலம் அவரது ஆரோக்கிய நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், புற்றுநோய் உடலின் ஏனைய பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பாப்பரசர் நாளை (18) புனித பீட்டர் சதுக்கத்தில் பாரம்பரிய 'ஏஞ்சலஸ்' (Angelus) பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதத்தை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பாப்பரசர் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், இதன்போது பேச்சுவார்த்தை மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Radio