அல்பேனியாவிலும் வெடித்த போராட்டம் - அரச கட்டிடங்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில், பிரதமர் எடி ராமாவின் அரசுக்கு எதிராக நடைபெறும் ‘Flamingo Revolution’ போராட்டம் தீவிரமடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கல்வி அமைச்சகம் அருகே தொடங்கிய மோதல்கள், பொருளாதார அமைச்சகம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.
போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், அதிர்வுக் குண்டுகள் மற்றும் நீர்த்தாரைகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகரிக்கும் கல்விச் செலவுகள் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் எடி ராமா உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




