சவுதியை பாதுகாக்க தயாராகும் எகிப்து!

சவுதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்தத் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி பெற, எகிப்து நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி அழைப்பு விடுத்துள்ளார்.
எகிப்து இராணுவ அகாடமி நிகழ்ச்சியில் பேசிய சிசி, சவுதி அரேபியா உதவி கோரினால், அதன் பாதுகாப்பிற்காகத் தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்க எகிப்து தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், எகிப்து எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தவோ போரில் ஈடுபடவோ விரும்பவில்லை என்றும், சவுதி அரேபியாவைப் பாதுகாப்பதே தங்களின் நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.




