SuperTopAds

இங்கிலாந்தை மீண்டும் மிரட்டும் COVID-19!

ஆசிரியர் - Editor IV
இங்கிலாந்தை மீண்டும் மிரட்டும் COVID-19!

இங்கிலாந்தில் COVID-19 காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 41 வீதமாக அதிகரித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்ததை விட தற்போது NHS மருத்துவமனைகளில் சுமார் 400 COVID-19 நோயாளிகள் கூடுதலாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஒரே வாரத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 46வீதமாக அதிகரித்துள்ளது.

இதில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த வயதுப் பிரிவினருக்கான மருத்துவமனை அனுமதி விகிதம், தேசிய சராசரியை விட 10 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

இந்தப் புதிய வகை வைரஸ் திரிபு Stratus என அழைக்கப்படுகிறது. இருப்பினும், முந்தைய வைரஸ் திரிபுகளை விட இது மக்களை அதிகமாக நோய்வாய்ப்படுத்துகிறது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இதற்கிடையில், காய்ச்சல் (Flu) பாதிப்பும் மற்றொரு சவாலாக உருவெடுத்துள்ளது. வழக்கத்தை விட முன்னதாகவே காய்ச்சல் பாதிப்பு தென்படத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்தில் காய்ச்சலுக்கான நேர்மறைப் பரிசோதனை முடிவுகள் இருமடங்காக அதிகரித்துள்ளன.

Radio