சுற்றுலா விடுதியில் பெரும் தீ விபத்து – வங்கதேஷில் 10 பேர் உயிரிழப்பு!

வங்கதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காக்ஸ் பஜார், இனானி கடற்கரையில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி மற்றும் உணவகத்தில் (அக்டோபர் 17) காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச தீயணைப்புத் துறையின் அறிக்கையின்படி, மரத்தால் அமைக்கப்பட்ட விடுதி மற்றும் உணவகத்தில் ஏற்பட்ட தீயை இரண்டு தீயணைப்புக் குழுக்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
சமையலறை அடுப்பிலிருந்தோ அல்லது மின்கசிவு காரணமாகவோ தீ பரவியிருக்கலாம் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
எனினும், தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.




