ரஷ்யத் தடைகள் தளர்வு - புதினை ஊக்குவிக்கும் ட்ரம்பின் முடிவுக்கு ஜெலென்ஸ்கி விமர்சனம்!

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும் அமெரிக்காவின் முடிவு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்குப் பலனளிப்பதுடன், அவரது நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்கும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தத்தைக் குறைப்பது, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைப் பாதிக்கக்கூடும் என்ற கவலையை அவரது கருத்து வெளிப்படுத்துகிறது.
அக்டோபர் 17 அன்று, ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளை அமல்படுத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறுத்திவைத்தார்.
இந்த முடிவு அமெரிக்காவின் தேசிய நலனுக்காக எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.




