மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறினால் ஹோமுஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு - ஈரான்!

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அக்ரமி-நியா எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா வெளியேறினால் ஹோமுஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, பிராந்திய நாடுகளின் கூட்டமைப்புடன் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும், அமெரிக்கா வெளியேற மறுத்தால் பலவந்தமாக வெளியேற்றப்படுவர் என்றும் அவர் X தளத்தில் தெரிவித்துள்ளார்.




