ஸ்பேஸ் எக்ஸ் தொழில்நுட்பம் - புதிய தலைமுறை ரோட்ஸ்டர் காரை அறிமுகம் செய்த டெஸ்லா நிறுவனம்!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், ஸ்பேஸ்எக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை ரோட்ஸ்டர் மின்சாரக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்தக் கார் காற்றில் எழும்பி சாகசம் செய்து மீண்டும் தரையிறங்குவது போன்ற காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
ரொக்கெட் உந்துவிசைத் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு உறிஞ்சும் அமைப்பைப் பயன்படுத்தி, கார் தலைகீழாக நகர்வது மற்றும் காற்றில் சுழல்வது போன்ற சாகசங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
எனினும், இத்தொழில்நுட்பங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் கார்களில் எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்தப் புதிய ரோட்ஸ்டர் காரின் உற்பத்தியை 2028ஆம் ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பறக்கும் கார்களின் வளர்ச்சிக்கு இந்தத் தொழில்நுட்பம் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.




