ரஷ்யா - அமெரிக்கா டீசல் உடன்பாடு - விரிசல் கண்டது உக்ரைனின் நட்பு!

ரஷ்யாவுடனான டீசல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த கோரிக்கைகளுக்கு இனி கட்டுப்படமாட்டோம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான தடைகளைத் தளர்த்திய அமெரிக்காவின் முடிவை அவர் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியமான செயற்கைக்கோள் தொடர்பு வசதிகள் தொடர்பிலும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பாதித்துள்ளது




