SuperTopAds

டிரம்ப் ஏமாற்றிவிட்டார் - வேதனையில் புலம்பும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

ஆசிரியர் - Editor IV
டிரம்ப் ஏமாற்றிவிட்டார் - வேதனையில் புலம்பும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து டீசல் எரிபொருளைப் பெறுவதற்கான புதிய ஒப்பந்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க நிர்வாகத்தால் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 14 அன்று பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பியர்ஸ் மோர்கனுக்கு வழங்கிய நேர்காணலில், டிரம்ப் நிர்வாகத்தால் துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜெலென்ஸ்கி “ஆம்” என்று பதிலளித்தார்.

மேலும், “அதிபர் டிரம்ப் எங்கள் பக்கம் இல்லாமல் வேறொரு தரப்பைத் தேர்ந்தெடுப்பது வேதனையளிக்கிறது. ஒரு வலுவான கூட்டாளியை நாம் இழந்து வருவது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

ரஷ்ய டீசல் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்திருந்த சில தடைகளைத் தளர்த்தும் முடிவு, மாஸ்கோவுக்கு கூடுதல் வருவாயை வழங்கி உக்ரைனுக்கு எதிரான போரை நீடிக்க உதவும் என்றும் ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.

அதேவேளை, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை அதிகரித்து விலைகளைக் குறைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்

Radio