SuperTopAds

சீனா – வட கொரியா இடையிலான நதிப் பாலம் திறந்துவைப்பு!

ஆசிரியர் - Editor IV
சீனா – வட கொரியா இடையிலான நதிப் பாலம் திறந்துவைப்பு!

சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய யாலு நதிப் பாலம் இன்று (15) வாகனப் போக்குவரத்துக்காக உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளதாக சீன அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், சீனா தனது பாலத்தின் நிர்மாணப் பணிகளை 2014ஆம் ஆண்டு நிறைவு செய்திருந்தது.

எனினும், வட கொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைகள் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை விதித்திருந்த தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கு சீனா ஆதரவளித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, வட கொரியா தனது பாலத்தின் நிர்மாணப் பணிகளைப் பல ஆண்டுகளாகக் கைவிட்டிருந்தது.

Radio