SuperTopAds

ஏமன் நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 116 பேரைக் காணாமல் என தகவல்!

ஆசிரியர் - Editor IV
ஏமன் நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 116 பேரைக் காணாமல் என தகவல்!

ஜிபூட்டியிலிருந்து ஏமன் நோக்கிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் உட்படக் குறைந்தது 109 அகதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 305 பேருடன் பயணித்த குறித்த படகு விபத்துக்குள்ளானதை அடுத்து, 116 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏமனில் நிலவும் கடுமையான உள்நாட்டு மோதல்கள் காரணமாக, அங்கு இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை செப்டம்பர் மாத நடுப்பகுதியில் 76,000 ஆக இருந்த நிலையில், தற்போது 200,000 ஆக விரைவாக அதிகரித்துள்ள பின்னணியிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Radio