நோபல் பரிசு கிடைக்காமையின் உச்சம் - நோர்வே நாட்டை விமர்சிக்கும் ட்ரம்ப்!

தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படாதது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோர்வே நாட்டை விமர்சித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் "தான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போருக்கும் தலா ஒரு நோபல் பரிசு என 8 முறை நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றும் யாருக்கும் தெரியாத ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கத் தவறிய நோர்வேயை நாங்கள் மறக்க மாட்டோம்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படாதது குறித்து நோர்வேயைக் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.




