SuperTopAds

லெபனானில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 200 மில்லியன் டாலர் மனிதநேய உதவி வழங்க ஈரான்!

ஆசிரியர் - Editor IV
லெபனானில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 200 மில்லியன் டாலர் மனிதநேய உதவி வழங்க ஈரான்!

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் டொனால்ட் டிரம்பின் நிர்வாக அழுத்தங்களையும் மீறி, லெபனானில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 200 மில்லியன் டாலர் மனிதநேய உதவியை வழங்க ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.

​மோதல்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள லெபனான் குடும்பங்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நிதி உதவியை வழங்கவுமே இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

​தேஹ்ரான் மீது வாஷிங்டன் தொடர்ந்து பல்வேறு தடைகள் மூலமாக அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் சூழ்நிலையிலும், லெபனான் மக்களின் அவசர நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஈரான் இந்நிதியுதவியை உறுதியளித்து வழங்கியுள்ளது.

Radio