உலகளவில் இஸ்ரேலுக்கு இருந்த ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளது - அமெரிக்காவின் மூத்த ஊடகவியலாளர்!

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தீவிர இராணுவ நடவடிக்கைகளும் அத்துமீறல்களும், உலக அரங்கில் அந்நாட்டின் சர்வதேசப் புகழையும் நன்மதிப்பையும் மிக மோசமாகப் பாதித்துள்ளதாக அமெரிக்காவின் பிரபல மூத்த ஊடகவியலாளர் அனா காஸ்பரியன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் தொடரும் மனிதாபிமான நெறிமுறைகளுக்கப்பாற்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியையும், முன்னெப்பொழுதும் இல்லாத வகையிலான சர்வதேசப் பரிசீலனைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால், உலகளவில் இஸ்ரேலுக்கு இருந்து வந்த ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், சர்வதேச தளத்தில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்




