சவுதியின் சில பகுதிகளுக்குப் செல்வதை தவிர்க்குமாறு இங்கிலாந்து குடிமக்களுக்கு அந்நாடு எச்சரிக்கை!

தொடர்ச்சியான ஹூதி தாக்குதல்களைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் சில பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரியாத்தில் உள்ள இலக்குகள் உட்பட, விமான நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ஹூதிகள் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவுக்கான தனது பயண எச்சரிக்கையை ஐக்கிய இராச்சியம் வலுப்படுத்தியுள்ளது.
மேலும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், ரியாத், அஸீர், நஜ்ரான் மற்றும் ஜிசான் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பிரிட்டிஷ் அதிகாரிகள் குடிமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.




