SCO அமைப்பில் ஈரானின் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு!

துருக்மேனிஸ்தானில் நடைபெற்ற சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் CIS உச்சிமாநாட்டின் போது, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் SCO பொதுச்செயலாளர் நூர்லான் எர்மெக்பாயேவை சந்தித்துப் பேசினார்.
பிராந்திய அமைதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாகவும், SCO அமைப்பில் ஈரானின் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.




