SuperTopAds

மின்சாதேஹி அணுஆயுத மேம்பாட்டு மையத்தை மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டுவரும் ஈரான் !

ஆசிரியர் - Editor IV
மின்சாதேஹி அணுஆயுத மேம்பாட்டு மையத்தை மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டுவரும் ஈரான் !

ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வடகிழக்கே அமைந்துள்ள மின்சாதேஹி அணுஆயுத மேம்பாட்டு மையத்தில் மீண்டும் கட்டுமானப் பணிகளும் வாகனப் போக்குவரத்தும் தீவிரமடைந்துள்ளதாகப் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை மேற்கோள்காட்டி சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால்  தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த இரகசிய மையத்தில், தற்போது சீரமைப்புப் பணிகள் மற்றும் மண் அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அப்பகுதியில் தொடர்ச்சியாக வாகனங்கள் வந்து செல்வதும் செயற்கைக்கோள் படங்களில் பதிவாகியுள்ளது.

தாக்குதலில் சேதமடைந்த அணுஆயுத மேம்பாட்டுத் திறனை ஈரான் மீண்டும் மீட்டெடுக்க முயல்வதையே இந்த நகர்வுகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இச்சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் அணுஆயுதப் போட்டி மற்றும் இராணுவப் பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radio