ரஷ்ய கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் பாரிய தீ பரவல்!

ரஷ்யாவின் சோச்சி துறைமுகத்திற்கு அருகாமையிலுள்ள கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றில் திடீரென பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பலில் இருந்து கிளம்பும் அடர்ந்த புகையானது கடற்கரையின் தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் தெளிவாகப் புலப்படுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, கப்பலிலிருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம் கசிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கப்பலைச் சுற்றியுள்ள கடல் மேற்பரப்பிலும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தினால் உயிர்ச்சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
அத்துடன், தீ விபத்துக்கான முதன்மை காரணமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




