SuperTopAds

காசா குழந்தைகள் படும் பேரவலத்தை மறந்துவிடக் கூடாது - ஸ்பெயின் பிரதமர்!

ஆசிரியர் - Editor IV
காசா குழந்தைகள் படும் பேரவலத்தை மறந்துவிடக் கூடாது - ஸ்பெயின் பிரதமர்!

காசா பகுதியில் உள்ள குழந்தைகள் சந்தித்து வரும் பேரவலத்தையும் துயரங்களையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதற்காக, காசாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வரைந்த ஓவியத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்  தனது அலுவலகப் பணி மேஜையில் வைத்துள்ளார்.

​பாட்டிலுக்குள் அடைக்கப்பட்டுள்ள அந்தச் சிறிய ஓவியத்தை தான் தினமும் பார்ப்பதாகவும், அது காசா குழந்தைகள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்களைத் தனக்கு நிரந்தரமாக நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆழமான செய்தியையும் உணர்வுகளையும் சுமந்து நிற்கும் இந்த நடவடிக்கை, தற்போது உலகளவில் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.

Radio