அமெரிக்கா, உக்ரைன் ரஷ்யா இடையே ஒக்டோபர் இறுதிக்குள் புதிய முத்தரப்புப் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஒக்டோபர் இறுதிக்குள் புதிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களுடன் இதுகுறித்து பேசியதாகவும், உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இடங்களை உக்ரைன் பரிசீலிக்கிறது.
முன்னைய பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




