SuperTopAds

காவி உடை களைளப்பட்டு,கைதி உடை அணிவிக்கப்பட்ட ஞானசார தேரர்!

ஆசிரியர் - Editor II
காவி உடை களைளப்பட்டு,கைதி உடை அணிவிக்கப்பட்ட ஞானசார தேரர்!

கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டு, கைதிகளுக்கான சீருடை அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தண்டனையின் மீதமுள்ள காலத்தை அனுபவிப்பதற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிறைக்கைதிகளுக்கான சீருடை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லெதென்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, தேரரின் காவி உடை அகற்றப்பட்டு, சிறைக்கைதிகளுக்கான சீருடை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் சாதாரண கைதிகள் தங்க வைக்கப்படும் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, மைத்திரிபால சிரிசேனவின் பொதுமன்னிப்பு வழங்கப்படும் காலம் வரையான காலப்பகுதிக்குள் கடந்த முறை ஞானசார தேரர் காவி உடையுடன் சிறைச்சாலை மருத்துவமனையில் தனது தண்டனைக் காலத்தை கழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Radio