தோல்விகளை மறைக்கவே சவுதி அரேபியா பொய்யுரைக்கின்றது - யமன் பாதுகாப்பு அமைச்சகம்!

மதினா நகரில் உள்ள மின்நிலையத்தின் மீது யமன் படைகள் தாக்குதல் நடத்தியதாக சவூதி அரேபியா சுமத்திய குற்றச்சாட்டை யமன் பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது முற்றிலும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும், தனது முந்தைய தோல்விகளை மறைக்கவே சவூதி அரேபியா இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் யேமன் இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளதோடு, இதற்கு பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.




