மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுங்கள் - காசா குறித்து மிஸ் ரேச்சல்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நீடித்து வரும் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பட்டினியால் அவதியுறும் குழந்தைகளுக்காகப் பிரபல அமெரிக்கச் சிறுவர் கல்வியாளரும் சமூக வலைத்தளச் செயற்பாட்டாளருமான மிஸ் ரேச்சல் உருக்கமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
காசா சிறுவர்களின் அவலநிலை குறித்துக் குரல் கொடுப்பதால் தம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளைத் தான் பொருட்படுத்தப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், "எனக்கெதிரான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியும்.
ஆனால் பிஞ்சுக் குழந்தைகள் உணவின்றிப் பட்டினியால் வாடுவதை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது எனக் கவலை வெளியிட்டுள்ளார்.
அங்குள்ள குழந்தைகளுக்குத் தேவையான அவசர மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்




