இலக்கு தவறிய இஸ்ரேல் ட்ரோன் - சொந்த வீரர்கள் மீது தாக்குதல்!

பாலஸ்தீன நபர் ஒருவரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட ட்ரோன் விமானம் தவறுதலாகச் சொந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் நடத்திய இந்தத் தவறான தாக்குதல் குறித்த விபரங்களை அம்மாநில ராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன இலக்கை நோக்கி ஏவப்பட்ட குண்டு, இலக்கு தவறி அருகில் இருந்த இஸ்ரேல் வீரர்கள் மீது விழுந்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




