தொடரும் போர் பதற்றம் - சேவைகளை தொடர்ந்தும் இடைநிறுத்த Cathay Pacific வானூர்தி நிறுவனம் தீர்மானம்!

ஈரானைச் சூழ தொடரும் மோதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணிகள் வானூர்தி சேவைகளை மேலும் தொடர்ந்தும் இடைநிறுத்த Cathay Pacific வானூர்தி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் மற்றும் சவூதி அரேபியாவின் ரியாத் நகரங்களுக்கான பயணிகள் வானூர்தி சேவைகள் 2027 ஜனவரி 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, Cathay Pacific நிறுவனம் மத்திய கிழக்கு வானூர்தி சேவைகளை இடைநிறுத்தும் காலத்தை நீடிப்பது இது மூன்றாவது முறையாகும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட Cathay Pacific நிறுவனம் தெரிவித்துள்ளது.




