SuperTopAds

மொரோக்கோவின் முதலாவது பெண் பிரதமராக பாத்திமா ஸஹ்ரா எல் மன்சூரி நியமனம்!

ஆசிரியர் - Editor IV
மொரோக்கோவின் முதலாவது பெண் பிரதமராக பாத்திமா ஸஹ்ரா எல் மன்சூரி நியமனம்!

மொரோக்கோ நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பாத்திமா ஸஹ்ரா எல் மன்சூரி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரபு மற்றும் ஆபிரிக்க பிராந்தியத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த நியமனத்தின் மூலம், மொரோக்கோவின் ஆட்சிப் அதிகாரத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் பெண்கள் உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Radio