முக்கிய அரசியல் கூட்டணிகளைத் தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுக்கும் 'இஸ்ரேலின்' மத்திய தேர்தல் ஆணையம்!

நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நான்கு வாரங்கள் இருந்த நிலையில், அரபுத் தலைமையைச் கொண்ட முக்கிய அரசியல் கூட்டணிகளைத் தேர்தலில் போட்டியிடவிடாமல் தடுக்கும் வகையில் 'இஸ்ரேலின்' மத்திய தேர்தல் ஆணையம் வாக்களித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கான அனைத்து அமெரிக்க இராணுவ உதவிகளையும் நிறுத்திவைக்குமாறு அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
'X' தளத்தில் வெளியிட்ட பொது அறிக்கை ஒன்றில், அரபு குடிமக்களை அரசியல் செயல்முறையிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஆளும் கூட்டணியின் திட்டமிட்ட முயற்சியையே இந்த முடிவு வெளிப்படுத்துகிறது என்று அந்தச் சுயேச்சை செனட்டர் வாதிட்டார்.
"தேர்தலுக்கு நான்கு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேலின் தேர்தல் ஆணையம் இரண்டு முக்கிய அரபு கட்சிகளையும் தடை செய்தது," என்று சாண்டர்ஸ் குறிப்பிட்டார்.
"இது ஏற்கனவே தெளிவாகத் தெரியவில்லை என்றால், நெதன்யாகுவும் அவரது தீவிர வலதுசாரி கூட்டாளிகளும், மக்கள் தொகையில் 20 சதவீதமாக உள்ள பாலஸ்தீன குடிமக்களுக்கு எவ்விதக் குரலும் இல்லாத ஒரு இஸ்ரேலையே விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இனி இஸ்ரேலுக்கு அமெரிக்க இராணுவ உதவி வழங்கப்படக்கூடாது.




