இஸ்லாமிய பண்டிகைகளை அரசு விடுமுறை நாள்களாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த கலிஃபோர்னியா !

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம் ஈதுல் பித்ர் (ரமழான் பெருநாள்) மற்றும் ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள்) ஆகிய இஸ்லாமிய பண்டிகைகளை உத்தியோகபூர்வ அரசு விடுமுறை நாட்களாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
வாஷிங்டன் மாநிலத்திற்கு அடுத்தபடியாக இந்த அறிவிப்பை வெளியிடும் இரண்டாவது அமெரிக்க மாநிலமாக கலிஃபோர்னியா திகழ்கிறது.
இந்தப் புதிய சட்டத்தின் கீழ் பாடசாலைகளைக் கட்டாயமாக மூட வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும் உரிமையை அந்தந்த பாடசாலை மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும், மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் (Paid leave) பயன்படுத்தி இந்தப் பண்டிகைகளைக் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




