SuperTopAds

மேற்குக்கரை பாதுகாப்பு தொடர்பில் பங்காளிகளுடன் அமெரிக்க தொடர்ந்து பேச்சும் - அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி!

ஆசிரியர் - Editor IV
மேற்குக்கரை பாதுகாப்பு தொடர்பில் பங்காளிகளுடன் அமெரிக்க தொடர்ந்து பேச்சும் - அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி!

மேற்குக்கரையில் உள்ள ஜாலுட் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்த தகவல்கள் அறிந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் அல் ஜசீரா செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மேற்குக்கரையில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் பங்காளிகளுடன் அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மேற்குக்கரையில் எத்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் குற்றவியல் வன்முறைகளையும் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகப் பொருத்தமான விசாரணைகள், சட்டப் பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறை நடைமுறைகள் முன்னெடுக்கப்படுவதை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Radio