காலியில் துப்பாக்கி சூடு - இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் காயம்

காலி பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்
கார் ஒன்றில் வந்த குழுவினரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு பெண்களும், ஆண் ஒருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 2 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.




