SuperTopAds

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதிப் பால நிர்மாணம்:GeoTech நிபுணத்துவக் குழுவினால் முதற்கட்டக் கள ஆய்வு!

ஆசிரியர் - Editor III
சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதிப் பால நிர்மாணம்:GeoTech நிபுணத்துவக் குழுவினால் முதற்கட்டக் கள ஆய்வு!

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதிப் பால நிர்மாணம்:GeoTech நிபுணத்துவக் குழுவினால் முதற்கட்டக் கள ஆய்வு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் முயற்சியால் 150 மில்லியன் ரூபாயில் விரைவில் பணி ஆரம்பம்

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதிப் பால நிர்மாணப் பணிகளின் முதற்கட்ட நடவடிக்கையாக, மண் மற்றும் புவிநுட்பப் பரிசோதனைகளுக்கான 'GeoTech' நிபுணத்துவக் குழுவினர்  அண்மையில்  சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் பேரில், சுமார் 150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப் பாலத்தை நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

இப் பால நிர்மாணப் பணிகளை மிக உறுதியாகவும் தரமாகவும் அமைக்கும் நோக்கில் வருகை தந்த நிபுணத்துவக் குழுவினர், பாலத்தின் அமைவிடம், மண் கட்டமைப்பு மற்றும் புவிநுட்ப அம்சங்கள் குறித்து விரிவான கள பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.இக் கள ஆய்வின் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, பாலத்திற்கான வரைபடங்கள் இறுதி செய்யப்பட்டு, மிக விரைவில் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இப் பால நிர்மாணமானது நிறைவடையும் பட்சத்தில், சாய்ந்தமருது வைத்தியசாலைக்கான போக்குவரத்துச் சிரமங்கள் குறைக்கப்பட்டு, பிரதேச மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Radio