கல்வித்துறையில் சாதனை படைத்தோருக்கு ‘அல் மீஸான் பௌண்டஷன்’ பாராட்டு விழா: முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!

கல்வித்துறையில் சாதனை படைத்தோருக்கு ‘அல் மீஸான் பௌண்டஷன்’ பாராட்டு விழா: முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!
கல்வித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கல்வியாளர்களையும், கல்வியில் சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நோக்கிலான விசேட சான்றோர் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா ஆளுநர் சபைத் தலைவரும், சிலோன் இன்ஸ்டியூட் ஒப் மேனஜ்மென்ட் சயன்சஸ் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயலாளரும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளருமான இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி எச்.ஈ.எம்.டபிள்யு.யூ. திசாநாயக்க கலந்துகொண்டார்.
மாண்புறும் அதிதியாகக் கல்முனை கல்வி வலயத்தை இலங்கையின் முன்னணி கல்வி வலயங்களில் ஒன்றாக உயர்த்துவதில் முக்கிய பங்காற்றிய வலயக் கல்விப் பணிப்பாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை மூத்த அதிகாரியுமான எம்.எஸ். சஹதுல் நஜீம் கலந்துகொண்டார்.
அத்துடன், கௌரவ அதிதிகளாகக் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன், கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரசான், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அரசு நிர்வாகம், கல்வி, சுகாதாரம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் சாதனை மாணவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சாதனையாளர்களுக்குப் பாராட்டுச் சான்றுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன





