SuperTopAds

சாய்ந்தமருதில் சமுர்த்தி கௌரவிப்பு விழா வெகுவிமர்சை: சாதனையாளர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கல்!

ஆசிரியர் - Editor III
சாய்ந்தமருதில் சமுர்த்தி கௌரவிப்பு விழா வெகுவிமர்சை: சாதனையாளர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கல்!
சாய்ந்தமருதில் சமுர்த்தி கௌரவிப்பு விழா வெகுவிமர்சை: சாதனையாளர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கல்!
நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி ஆதம்பாவா உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் கௌரவிப்பு
 சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்தி கௌரவிப்பு நிகழ்வு சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் எம். எஸ். எம். றஸ்ஸான் தலைமையில் அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகத் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கரையோர பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்துகொண்டார்.கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கரன், சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். முவஃபிக்கா ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், விசேட அதிதிகளாகச் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமையகச் சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். றிபாயா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கிச் சங்கக் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

2026 ஆம் ஆண்டு சமுர்த்தி கொடி விற்பனையில் அதிகளவு நிதி திரட்டி சாதனை படைத்த சிறந்த 10 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், 10 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கும் (CBOs) நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 2026 ஆம் ஆண்டு சமுர்த்தி புதுவருட கொடுக்கல் வாங்கல் மாதத்தை முன்னிட்டுச் சமுர்த்தி வங்கியில் அதிக நிதிகளைச் சேகரித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சிறுவர்களுக்கான பரிசுகள்: சமுர்த்தி 'கெக்குலு' கலை மற்றும் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பணியாற்றி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி ஆதம்பாவா, புதிய மாவட்டச் சமுர்த்திப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கரன், புதிய பிரதேச செயலாளர் எம். எஸ். எம். றஸ்ஸான், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். முவஃபிக்கா மற்றும் 32 வருட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.இந்நிகழ்வு சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபரினால் மிகச் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Radio