SuperTopAds

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியத் திட்டம்: எம்பி ரிஷாட் பதியுதீனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!

ஆசிரியர் - Editor III
இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியத் திட்டம்: எம்பி ரிஷாட் பதியுதீனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியத் திட்டம்: எம்பி ரிஷாட் பதியுதீனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!

தென்கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வழிகாட்டலில் திட்ட முன்மொழிவு தயார்

 இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களினதும் நலன்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில், 'சிலோன் மீடியா போரம்' (Ceylon Media Forum) முன்மொழிந்துள்ள "இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்" (Sri Lanka Journalists Trust Fund) தொடர்பான உத்தியோகபூர்வ முன்மொழிவு அறிக்கை அரசியல் கட்சித் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரஃப் தாஹிர் ஆகியோரிடம் இம்முன்மொழிவு அறிக்கை நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (19) உத்தியோகபூர்வமாகக் கையளித்து வைக்கப்பட்டது.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் உறுப்பினர் ஏ.எச்.எம். ஹாரீஸ், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எம். அன்ஸில் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் முன்னிலையில் இவ்வறிக்கை வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம். முஸ்தபா, பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் ஆகியோரின் உயரிய வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாகவே இத் திட்டத்திற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Radio