SuperTopAds

"எனது மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள்"

ஆசிரியர் - Editor II

"எனது மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள்" என சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும்  அனோஜனின் தாயார் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார் 

கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு கோரினார் 

எனது மகன் செய்தது தவறுதான் .அதற்காக அவரும் ஏலவே மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். ஜம்மியத்துல் உலமாசபை, இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கம், முஸ்லிம் தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயவு கூர்ந்து  மீண்டும் ஒருமுறை மன்னித்து எனது மகனை உயிரோடு மீட்டு தாருங்கள் என கோரியுள்ளார் 

Radio