SuperTopAds

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்': நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவிடம் திட்ட அறிக்கை கையளிப்பு!

ஆசிரியர் - Editor III
இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்': நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவிடம் திட்ட அறிக்கை கையளிப்பு!

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்': நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவிடம் திட்ட அறிக்கை கையளிப்பு!

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற நிகழ்வு

 

நாட்டின் மூவின ஊடகவியலாளர்களுக்காகச் சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்" ஸ்தாபிப்பது தொடர்பான திட்ட அறிக்கையின் பிரதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களிடம் நேற்று (17) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம். முஸ்தபா, பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் மற்றும் கலாநிதி எம்.ஐ.எம். றியாத் ஆகியோரின் வழிகாட்டலில் இத்திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற சமுர்த்தி கௌரவிப்பு நிகழ்வின் போது, அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களிடம், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத்தினால் இப் பிரதி கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சுப்ரமணியம் கரன் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் ஆகியோர் முன்னிலையில் இக் கையளிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Radio