விபத்தில் சிக்கி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த புத்தளம், சாலியவெவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் பண்டார என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த லொறியின் வலது பக்கத்தில் பலமாக மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான சார்ஜன்ட், அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




