அடுத்த உலகப்போர் விண்வெளியில் - சீன ஆய்வில் எச்சரிக்கை!

பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட விண்வெளிப் பகுதி வல்லரசு நாடுகளின் எதிர்கால போர்க்களமாக மாறக்கூடும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
நிலவின் சிக்கலான ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலன்கள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து தாக்குதல் நடத்த முடியும்.
விண்வெளியின் முக்கியப் பாதைகளைக் கைப்பற்றி, எதிரி நாட்டின் விண்கலன்களை வழிமறிக்கவும், விண்வெளிப் பயணங்களைத் தாமதப்படுத்தவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
பூமி - நிலவு இடைப்பட்ட இந்த மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விண்வெளியின் முழு அதிகாரத்தையும் தன்வசப்படுத்தி எதிரிகளை அச்சுறுத்த முடியும் என ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஜாங் ஜாஹூய் விளக்கியுள்ளார்.




