SuperTopAds

யுக்ரைன் அமைதி முயற்சி - புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!

ஆசிரியர் - Editor IV
யுக்ரைன் அமைதி முயற்சி - புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!

யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர்கள் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரே இந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, யுக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தலா மூன்று நாட்களுக்குத் தலைநகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தாமல் இருக்க ஒப்புக்கொண்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதர்கள் யுக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் சென்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

எனினும், பிராந்தியம் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடரும் நிலையிலேயே இந்தச் சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Radio