SuperTopAds

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா சென்ற ட்ரம்பின் இரண்டு சிறப்புத் தூதுவர்கள்!

ஆசிரியர் - Editor IV
ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா சென்ற ட்ரம்பின் இரண்டு சிறப்புத் தூதுவர்கள்!

ஐந்து வருடத்தை தொடும் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு சிறப்புத் தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்யாவின் மொஸ்கோ வந்தடைந்தனர்.

ஜாரெட் குஷ்னர், ட்ரம்பின் மருமகன் ஆவார். ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சிறப்பு முன்மொழிவையும் கொண்டுவந்த ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்யத் தரப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பிறகு, அவர்கள் உக்ரைனியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைனியத் தலைநகரான கீவ்விற்குச் செல்வார்கள்.

Radio