ஈரானுடனான யுத்தம் "மிகச் சிறிய விஷயம்" - ட்ரம்ப்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் குறித்து பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதனை "மிகச் சிறிய விஷயம்" என்றும், அது ஒரு முழுமையான போர் அல்லாமல் அவ்வப்போது நடைபெறும் ஒரு ராணுவ மோதல் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய இந்த மோதலில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், உலகளவில் எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த மோதலின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டும் வகையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் இது போன்ற கருத்துகளைத் தெரிவித்து வருவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, ஈரானின் அணுசக்தி தளம் மீது விரைவில் புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.




