SuperTopAds

போரின்போது ஈரான் தலைமை ரஷ்யாவிடம் இராணுவ உதவியைக் கோரவில்லை - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்!

ஆசிரியர் - Editor IV
போரின்போது ஈரான் தலைமை ரஷ்யாவிடம் இராணுவ உதவியைக் கோரவில்லை - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் நடுநிலை வகிக்கத் தீர்மானித்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் சுமார் 20 லட்சம் ரஷ்யர்கள் வசிப்பதால், அது கிட்டத்தட்ட ஒரு ரஷ்ய மொழி பேசும் நாடாகவே திகழ்வதே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற நேர்காணலில் பேசிய புடின், முடிவுகளை எடுப்பதற்கு முன் ரஷ்யா பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஆயிரக்கணக்கான ரஷ்யக் குடிமக்கள் இஸ்ரேலில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதை மாஸ்கோ கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான கூட்டாண்மை ஒப்பந்தத்தில், ஈரானுக்கு ராணுவ உதவி வழங்குவதோ அல்லது இஸ்ரேலைத் தோற்கடிக்க ஈரானுக்கு உதவ ராணுவ ரீதியாகத் தலையிடுவதோ இடம்பெறவில்லை என்று புடின் தெரிவித்தார்.

போரின் போது ஈரான் தலைமை ரஷ்யாவிடம் ராணுவ உதவியைக் கோரவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Radio