நேபாள வெள்ள அனர்த்தம் - இந்தியா மேலும் உதவி!

பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா தனது நிவாரண உதவிகளை மேலும் அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, விசேட மீட்பு உபகரணங்களுடன் 11 பேர் கொண்ட மீட்புக் குழுவும், 5.5 தொன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130J விமானம் மூலம் நேற்று (02) நேபாளம் சென்றடைந்துள்ளன.
இந்தியாவின் நிவாரணப் பொருட்களின் சமீபத்திய தொகுப்பை நேபாள அரசாங்கத்திடம் இந்தியத் தூதுவர் நவீன் ஸ்ரீவஸ்தவா உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்கும் நோக்கில் இந்தியா தனது நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.




