காசாவிலிருந்து படைகள் எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்பட மாட்டாது - இஸ்ரேலியப் பிரதமர்!

அமெரிக்காவினால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், காசாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலியப் படைகள் எக்காரணம் கொண்டும் அங்கிருந்து திரும்பப் பெறப்பட மாட்டாது என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார்.
புதன்கிழமை அன்று காசா பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள இஸ்ரேலிய இராணுவ வீரர்களைச் சந்தித்தப் பின்னரே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அமைதி முயற்சிகளுக்கு மத்தியிலும் இஸ்ரேல் தனது படை நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் என்ற நெதன்யாகுவின் இந்த நிலைப்பாடு பிராந்தியத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




