ஈரானுக்கு அதிநவீன ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா இரகசியமாக உதவி - புலனாய்வு தகவலால் அமெரிக்கா அதிர்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் பிற போர்க்கப்பல்களை இலக்கு வைத்து தாக்கும் வகையில், ஈரானுக்கு அதிநவீன சூப்பர்சோனிக் விசைப்படகு/க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா இரகசியமாக உதவி வருவதாக 'ஃபைனான்சியல் டைம்ஸ்' புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கசிந்த இரகசிய ஆவணங்கள் மற்றும் பயணப் பதிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 'C430L' என்ற குறியீட்டுப் பெயரிலான இரகசியத் திட்டத்தின் கீழ் ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் ஈரானுக்குத் தொழில்நுட்ப உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருவது அம்பலமாகியுள்ளது.




