ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திடீர் சந்திப்பு!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் இடையே, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகள், வர்த்தகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து இந்த உயர்மட்ட சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தொடங்கிய பிறகு நடைபெற்ற தங்களின் முதல் சந்திப்பில், அப்போர் சூழலில் மாஸ்கோ (ரஷ்யா) மேற்கொண்ட நிலைப்பாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் செவ்வாய்க்கிழமையன்று நன்றி தெரிவித்தார்.




