SuperTopAds

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சீனாவின் PALLAS-1 Y1!

ஆசிரியர் - Editor IV
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சீனாவின் PALLAS-1 Y1!

சீனாவின் வணிக விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில், PALLAS-1 Y1 வாஹக விண்கலம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

வடமேற்கு சீனாவின் டாங்பெங்  வணிக விண்வெளி புத்தாக்க மாதிரி மண்டலத்திலிருந்து இந்த விண்கலம் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளது.

பெய்ஜிங் நேரப்படி  (01) காலை 10.00 மணியளவில் ஆகும்.

குறித்த நேரத்தில் ஏவப்பட்ட அந்த விண்கலம், முழுமையான வானுார்தி பயணக் காலத்தில் எந்தவிதத் தடங்கலும் இன்றிச் சீராக இயங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, PALLAS-1 Y1 வாஹக விண்கலத்தின் இந்த முதல் நடவடிக்கையின் போது எதிர்பார்த்த அனைத்துப் பரிசோதனை நோக்கங்களையும் முழுமையாக வெற்றிகொள்ள முடிந்ததாகச் தொடர்புடைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த வெற்றியுடன் சீனாவின் எதிர்கால வணிக விண்வெளி நடவடிக்கைகளுக்காக புதிய பாதை திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Radio