முஸ்லிம்களுக்கு இடையிலான பிளவுகள் எதிரிகளுக்கே சாதகமாக அமையும் - ஈரானின் உச்ச தலைவர்!

முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் பாலஸ்தீனியர்கள் இந்தளவுக்கு அனாதரவாகக் கைவிடப்பட்டிருப்பார்களா என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி உருக்கமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.
இஸ்லாமிய ஒற்றுமை வாரத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட செய்தியில், வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களது பொன்னான நிலங்களையும் வளங்களையும் அந்நிய சக்திகள் சூறையாட விடாமல் தடுக்க உடனடியாக இஸ்லாமியக் கொடியின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு இடையிலான பிளவுகள் எதிரிகளுக்கே சாதகமாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களது உண்மையான எதிரியை அடையாளம் கண்டு கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.




